உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில், 3 சிக்சர்கள் விளாசியதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக எண்ணிக்கையிலான சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றையப் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. 105 ஓட்டங்களில் பாகிஸ்தான் அணி சுருண்ட நிலையில், கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தினால் வெஸ்ட் இண்டீஸ் அணி 14வது ஓவரிலேயே வெற்றி பெற்றது.

கெய்ல் 3 சிக்சர்களுடன் 50 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் 40 சிக்சர்களுடன் உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இரண்டாவது இடத்தில் டி வில்லியர்ஸ் (37), 3வது இடத்தில் ரிக்கி பாண்டிங் (31), 4வது இடத்தில் பிரெண்டன் மெக்கல்லம் (29) ஆகியோர் உள்ளனர்.

AFP

இந்த சாதனையுடன் மேலும் சில சாதனைகளையும் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம், தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்த 8வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அத்துடன், சர்வதேச போட்டிகளில் 19,000 ஓட்டங்களை எட்டிய 3வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிரையன் லாரா மற்றும் சந்தர்பால் ஆகியோருக்கு பிறகு கிறிஸ் கெய்ல் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்