படுதோல்வியடைந்த இலங்கை .. கார்டிஃப்பில் அந்நாட்டு ரசிகர்கள் செய்த செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த நிலையிலும் இலங்கை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேல்ஸ் தலைநகர் கார்டிஃப்பில் உள்ள மைதானத்தில் இலங்கை-நியூசிலாந்து மோதிய போட்டி நடைபெற்றது. இப்போட்டியை காணவும், இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்தவும் இலங்கை ரசிகர்கள் பலர் மைதானத்தில் குவிந்தனர்.

எனினும், போட்டியின் முடிவில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிப்பெற்றது.

இலங்கை அணி படுதோல்வி அடைந்த போதிலும் கார்டிஃப்பில், இலங்கை ரசிகர்கள் அந்நாட்டு கொடியுடன் இசை கருவிகளை இசைத்து, உற்சாகத்துடன் நடனமாடி ஊர்வலமாக சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்