வார்னர், பின்ச் நிதானம்... ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடருக்கான 4 வது போட்டியில், ஆப்கானிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகம்மது ஷஹ்சாத், ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சில் திணறிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள், 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை குவித்தனர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் (89), பின்ச் (66) சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

இதனால் அந்த அணி 34.5 ஓவர்களிலே இலக்கை கடந்து வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்