டோனியின் கையுறை சர்ச்சை குறித்து ரோஹித் ஷர்மாவின் கருத்து என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி பலிதான் முத்திரை கொண்ட கையுறையை அணிந்திருந்தது குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.

டோனியின் கையுறை சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்தது.

அத்துடன் டோனியின் கையுறையில் இருந்த அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதை பி.சி.சி.ஐ-யும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மாவிடம் கேட்டபோது, ‘இந்த சர்ச்சை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது பற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

டோனி கையுறையில் உள்ள முத்திரையை நீக்குவாரா, இல்லையா என்பது நாளை (இன்று) நடக்கும் போட்டியின்போது தெரிந்துவிடும்’ என தெரிவித்துள்ளார். ஐ.சி.சி-யின் வேண்டுகோளின்படி இன்றைய போட்டியில் டோனி, வேறு கையுறையை அணிந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்