உலகக்கோப்பை 2019... விக்கெட்டிற்காக பால் டெம்பரிங் செய்தாரா ஜாம்பா? வைரலாகும் சர்ச்சை வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளார் ஜாம்பா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. அதன் படி இந்திய அணி சற்று முன் வரை 46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில், இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து விச்சாளரான ஜாம்பா, பந்து வீசுவதற்கு முன்பு தன்னுடைய பேண்ட் பையில் இருந்து ஏதோ எடுத்து தடவுவது போன்று உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணி வீரர்களான ஸ்மித், வார்னர் ஆகியோர் பால் டெம்பரிங்கில் சிக்கினர். அவர்களுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு தற்போது தான் இந்த உலகக்கோப்பை தொடரில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்