அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 14வது லீக் போட்டியில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேருக்குநேர் மோதின.

லண்டன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி துவக்கம் முதலே நிதானமாக விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 117 ரன்களும், விராத் கோலி 82 ரன்களும், ரோகித்சர்மா 57 ரன்களும் குவிந்திருந்தனர்.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள், நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

ஒரு கட்டத்தில் வெற்றியானது அவுஸ்திரேலிய அணி பக்கம் சென்றது. ஆனால் கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்ததால், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே குவிந்திருந்தது.

போட்டிக்கு பின்னர் வெற்றி குறித்து பேசிய விராட்கோஹ்லி, துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். முதல் பந்திலிருந்து அதிரடி ஆட்டத்தை தவான் துவக்க அதை நானும் பின்பற்றி திட்டமிட்டபடி விளையாடியது சிறப்பாக இருந்தது என கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers