உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பின்... தவான் போட்ட ட்வீட்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இருந்து தற்காலிகமாக விலகிய பின் இந்திய நட்சத்திர இடது கை துடுப்பாட்டகாரர் ஷிக்கர் தவான், கவிரை ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய பின் ஷிக்கர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், காயம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், சிறகுகளுக்கு பதிலாக மன உறுதியால் நாம் பறக்கிறோம், அதனை கத்தரித்துவிட முடியுமா என்ற உருது மொழி கவிஞர் ரஹட் இந்தோரியின் கவிதையை பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers