இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி அவுஸ்திரேலியா வீரர்களை உற்சாகப்படுத்துங்கள், அப்படி செய்யாதீர்கள் என்று கூறிய நிலையில், இதே போன்று பாகிஸ்தான் ரசிகர்களும் செய்வார்களா என்ற கேள்விக்கு அந்தணியின் தலைவர் சர்பிராஸ் கான் விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், அவுஸ்திரேலியா அணி விளையாடும் போது, பால் டெம்பரிங் விவகாரத்தில் சிக்கிய ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியின் போது ரசிகர்கள் ஸ்மித்தை சீண்டியதால், அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த கோஹ்லி, இப்படி செய்யாதீர்கள் அவர்களை உற்சாகப்படுத்துங்கள் என்று கூறினார்.
Journalist: Will you do what #ViratKohli did if Pakistan fans boo Smith and Warner?#SarfarazAhmed: pic.twitter.com/8NaekmIpvt
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 11, 2019
அது சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி கிரிக்கெட் ஒரு ஜென்டில் மேன் கேம் என்பதை கோஹ்லி நிரூபித்துவிட்டார் என்று அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தான்-அவுஸ்திரேலியா போட்டி துவங்குவதற்கு முன்பு, பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமதுவிடம், இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது ரசிகர்கள் ஸ்மித்தை சீண்டினர்.
ஆனால் கோஹ்லி இடையில் குறுக்கிட்டு அப்படி செய்யாதீர்கள் என்று கூறினார். அதே போன்று பாகிஸ்தான் வீரர்களும் போட்டியின் போது அப்படி கத்துவார்களா? என்று கேட்ட போது, அதற்கு அவர் அப்படி எல்லாம் அவர்கள் கிடையாது, எங்கள் நாட்டு ரசிகர்கள் இதை எல்லாம் விரும்பமாட்டார்கள்.
அவர்கள் கிரிகெட்டை நேசிப்பவர்கள், வீரர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பவர்கள், நிச்சயமாக அப்படி நடந்து கொள்ளமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.