ஐ எம் பேக்..! அணிக்கு மீண்டும் திரும்பும் இலங்கை நட்சத்திரம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் காயமடைந்து சிகிச்சைக்காக ஓய்வில் இருந்த இலங்கை நட்சத்திர பந்துவீச்சாளர் நுவன் பிரதீப், அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 9ம் திகதி பிரிஸ்டல் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது இலங்கை நட்சத்திர பந்து வீச்சளார் நுவன் பிரதீப் விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால், சிகிச்சைக்காக ஓய்வில் இருந்த அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்தது. கடந்த வாரம் முதல் விரல் காயத்தால் அவதிப்பட்டு வந்த நுவன் பிரதீப் முதன் முறையாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை அணியின் பிசியோ குழுவை சேர்ந்த அஜந்தா வாட்டகம, பிரதீப்பின் குணமடைய அதிக கவனம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் யூன் 15ம் திகதி ஓவல் மைதானத்தில் இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

அதற்குள் முழுமையாக குணமடையும் பிரதீப், தனது உடற்தகுதி பெற்று அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்