எங்களுக்குள்ளான வரைமுறைக்குள் தான் விளையாட முடியும்! இலங்கை அணித்தலைவர் அதிரடி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியை தங்களால் Copy அடிக்க முடியாது என்றும், அவர்களைப் போல விளையாடவும் முடியாது என்றும் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னே தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் இரு ஆட்டங்கள் மழையால் ரத்து என 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அடுத்ததாக அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி சந்திக்க உள்ளது. இந்நிலையில், இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னே தங்களது அணியின் நிலை குறித்து கூறுகையில்,

‘எங்கள் அணியில் குறைவான திறமை உள்ள வீரர்களே உள்ளனர். மற்ற அணிகளோடு எங்களை ஒப்பீடு செய்தால், எங்களுக்கு மிகப்பெரிய வரைமுறைகள், பாதகங்கள் இருக்கின்றன. உதாரணமாக இந்தியாவுடன் ஒப்பிட்டால், ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியில் ஏதாவது ஒருவர் சதம் அடிக்கிறார்.

எங்கள் அணியில் ஆண்டுக்கே ஒரு சில வீரர்கள் தான் ஒன்று அல்லது இரண்டு சதம் அடிப்பார்கள். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவைக்கு ஏற்றார்போல் மிகப்பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை படைத்தவர்கள். எந்த ஸ்கோரையும் அடித்து, அதை எதிரணி அடையவிடாமல் தடுக்கும் திறமை கொண்டவர்கள்.

AFP

ஐ.பி.எல் அல்லது சர்வதேச போட்டி எதுவாக இருந்தாலும், எந்த ஒரு பந்துவீச்சாளரையும் நேருக்குநேர் சந்தித்து விளையாடியவர்கள். கிரிக்கெட்டில் அனைத்து விதமான அனுபவங்களும், புத்திசாலித்தனமும் இருக்கிறது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களை இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிட முடியாது.

இந்திய அணியில் மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் சராசரியாக 130 முதல் 135 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்களே உள்ளனர். ஆதலால், நாங்கள் சில வரையறைக்குள்ளாகவே விளையாட வேண்டியதாக இருக்கிறது.

நாங்கள் அணிகளுடன் போட்டியிட முடியும். ஆனால், இந்தியாவை Copy அடிக்க முடியாது. எங்களுக்கென தனியாக செயல்பாடு இருக்கிறது. நாங்கள் Smart ஆக விளையாடினால், யாரையும் தோற்கடிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers