ஏமாற்றிய கிறிஸ் கெய்ல்! 212 ஓட்டங்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

சவுதம்டானில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

உலகக்கோப்பையில் இன்றைய லீக் போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் லீவிஸ் 2, கிறிஸ் கெய்ல் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 11 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் ஹெட்மையர் மற்றும் பூரன் இருவரும் அணியை மீட்க போராடினர்.

இவர்களது நிதான ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. இந்நிலையில் ஹெட்மையர் 39 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹோல்டர் 9 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார். இதற்கிடையில் பூரன் அரைசதம் அடித்தார்.

ரஸல் தனது பங்குக்கு அதிரடியாக 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ஓட்டங்களுக்கு சுருண்டது.

Reuters

அதிகபட்சமாக பூரன் 78 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 63 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தற்போது இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers