ஜோ ரூட் அசத்தல் ஆட்டம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 19வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேருக்குநேர் மோதின.

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 212 ரன்களை குவிந்திருந்தது.

அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 68 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வூட், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளையும், லியாம் பிளன்கெட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் 45(46) - ஜோ ரூட் 100 (94) ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்ததால், 33.1 ஓவர்களில் 213 ரன்களை குவித்து அணி வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers