இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்தானால்... எத்தனை கோடி நஷ்டம்?

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எத்தனை கோடி வருவாய் இழப்பீடு ஏற்படும் என்பது குறித்து கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. முதலில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது கோப்பையை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத வகையில் தொடர் சென்றுகொண்டிருக்கிறது.

போட்டி எப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறதோ, அதே போன்று முக்கியமான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டு போட்டியை கெடுக்கிறது. இதனால் சுவாரஸ்யமான போட்டிகளை ரசிகர்கள் காண முடியாமல் போனது.

இதுவரை நடைபெற்ற 19 லீக் போட்டிகளில் 4 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

ஆனால் இந்த போட்டியின் போது 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த போட்டியை நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் காண்பதற்காகவே 80,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். மற்ற போட்டிகளை விட மும்மடங்கு வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டாலும் அதை பெற ரசிகர்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இதை குறிவைத்தே பெரும் வணிகமும் நடைபெறுவதால் போட்டி ரத்தானால் 100 கோடி ரூபாய் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்