சூப்பர் மேனாக மாறிய இங்கிலாந்து வீராங்கனை.. உலகமே பாராட்டும் கேட்ச்

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியின் போது இங்கிலாந்து வீராங்கனை பிடித்த கேட்ச்சை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

செல்ம்ஸ்ஃபோர்ட், தி கிளவுட்ஃப்ம் கவுண்டி மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, டக் வொர்த் லீவிஸ் விதி படி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை பிரான் வில்சன் டைவ் அடித்து பிடித்த கேட்ச்சை அனைவரும் பாராட்டி வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இன்னங்ஸின் போது இங்கிலாந்து வீராங்கனை கேத்ரின் கிராஸ் வீசிய பந்தை, துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் வீராங்கனை ஹேலி மேத்யூஸ், கவர்சில் அடித்தார். அப்போது, பிரான் வில்சன் டைவ் அடித்து பறந்து அந்த கேட்ச்சை பிடித்து அசத்தினார்.

இதை உடனிருந்த வீரர்கள் உட்பட மைதானமே பாராட்டியது. இங்கிலாந்து கிரிக்கெட் தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் இந்த கேட்ச் வீடியோவை பகிர்ந்துள்ளது.

தென் ஆப்பரிக்கா அணியின் முன்னாள் வீரரும், ஃபீல்டிங் ஜம்பவானுமான ஜான்டி ரோட்ஸ், தனது ஃபீல்டங் திறமையால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். அவர் தற்போது ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவரே இந்த கேட்ச்சை பிடித்த பிரான் வில்சனை அருமையான முயற்சி என பாராட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers