உலகக்கிண்ணம் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது தென் ஆப்பிரிக்க அணி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மோசமான நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை ருசித்துள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 21வது லீக் போட்டியானது கார்டிஃப் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத தென் ஆப்பிரிக்க, டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 125 ரன்களை குவிந்திருந்தது.

அந்த அணியில் ஹஸ்ரத்துல்லா ஸசாய் (22), நூர் அலி ஸத்ரான் (32) மற்றும் ரஷீத் கான் (35) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களையே குவித்திருந்தனர்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டிலே பிலுக்குவாயோ 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக்கிண்ணம் போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers