அவுஸ்திரேலியா உடனான தோல்விக்கு பின் இலங்கை அணி செய்த செயல்.. கோபத்தில் ஐசிசி

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த பின்னர் இலங்கை அணி செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்ததால் அபராதத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எந்தவொரு அணியின் பிரதிநிதியும் சர்வதேச போட்டிகளுக்கு முன்னும் பின்னும் செய்தியாளர்களிடம் பேசுவது வழக்கம், மேலும் ஐசிசி நிகழ்வில் அணிகள் பங்கேற்கும்போது இந்த கடமையை நிறைவேற்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை 20வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், இலங்கை அணி பத்திரிகையாளர் சந்திப்புக்கு யாரையும் அனுப்பவில்லை.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்த ஐசிசி செய்தித் தொடர்பாளர், நிருபர்களிடம் இலங்கை அணியினர் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என கூறினார்.

இலங்கை அணியினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், இதுதொடர்பாக ஐசிசி அவர்களிடம் பேசும் என ஐசிசி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறியதற்காக இலங்கை அணி அபராதத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்