2019 உலகக்கோப்பையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தும் பந்துவீச்சாளர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்கள் பலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகின்றனர்.

பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதமாகவே இருப்பவை. எனவே பெரும்பாலான அணிகள் 300 ஓட்டங்களை எளிதில் எட்டி விடுகின்றன. நடப்பு உலகக்கோப்பை தொடரில், 6 போட்டிகளில் அணிகள் 300 ஓட்டங்களை கடந்துள்ளன.

ஆனால், இதுபோன்ற ஆடுகளங்களிலும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சில பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார்.

நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் வீரர் ஜிம்மி நீசம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் முகமது ஆமிர், பலம் வாய்ந்த அவுஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இவர்களைப் போல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்குசன், வெஸ்ட் இண்டீஸின் ஓஷைன் தாமஸ் ஆகியோர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இனி வரும் போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers