பந்துவீச்சை தெரிவு செய்த பாகிஸ்தான்.. களமிறங்கிய இந்திய அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

மான்செஸ்டர் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை லீக் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டி மான்செஸ்டர் நகரில் தொடங்கியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி கோஹ்லி தலைமையிலான இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியுள்ளது.

தவான் இல்லாத காரணத்தினால் ரோஹித் ஷர்மாவுடன், லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...