இருமுறை எச்சரிக்கப்பட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளார்! அப்படி என்ன செய்தார்?

Report Print Kabilan in கிரிக்கெட்

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இரு முறை எச்சரிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், பந்துவீசும்போது ஓடிவந்து பந்தை வீசிவிட்டு பிட்சிற்குள் ஓடினார். இதனால் நடுவர் அவருக்கு முதல் எச்சரிக்கை விடுத்தார்.

அதன் பின்னர், ஆட்டத்தின் 5வது ஓவரை ஆமிர் வீசினார். ராகுலுக்கு அவர் பந்துவீசும்போதும், பந்துவீச்சை முடித்து விட்டு பிட்சிற்குள் ஓடி வந்தார்.

இது இரண்டாவது முறை என்பதால் மீண்டும் அவரை நடுவர் எச்சரித்தார். எனவே, இன்னொரு முறை இதேபோல் ஆமிர் பிட்சிற்குள் ஓடிவந்தால், இந்தப் போட்டியில் இனி அவர் பந்துவீச முடியாது.

அவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தற்போது வரை இந்திய அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers