எங்கள் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த தவறிவிட்டோம்: பாகிஸ்தான் கேப்டன் சோகம்.

Report Print Abisha in கிரிக்கெட்

ரோகித்த சர்மாவை தோற்கடிக்க நாங்கள் போட்ட திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிஃராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். அதிலும் குறிப்பாக இந்த போட்டி புல்வாமா தாக்குதலுக்கு பின் நடைபெறும் போட்டியாகும். எனவே இந்திய பாகிஸ்தான் அணி ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று நடத்த ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரோகித்சர்மாதான் ஏனெனில் அவர், 140 ஓட்டங்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து கோஹ்லி 77ஓட்டங்களும் எடுத்திருந்தார். இந்திய அணி பாகிஸ்தானுக்கு 337 வெற்றி இலக்கு நிர்ணையித்திருந்தது. ஆனால் 212 ஓட்டங்கள் மட்டும் எடுத்து பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.

தோல்விக்கு பின் போசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிஃராஸ், டாஸ்க் வென்று முதலில் பந்து வீச தெரிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் சரியான பகுதியில் பந்து வீசவில்லை.

மேலும் ரோகித்சர்மாவை எப்படியாவது ஆட்டம் இழக்க செய்யவேண்டும் என்று திட்டமிட்டோம் அதை நாங்கள் சரியாக செய்ய தவறிவிட்டோம் என்றார்.

எங்கள் போட்டியும் சிறப்பாகவே துவங்கியது. ஆனால் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டோம் அதுவே தோல்விக்கான முக்கிய காரணமாகிவிட்டது. இந்த போட்டி எங்களை கடுமைாயக்கி உள்ளது. அடுத்த நான்கு போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers