சச்சினா? ரோஹித் ஷர்மாவா? ட்விட்டரில் வைரலாகும் சிக்சர் வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா விளாசிய சிக்சர் ஒன்றையும், சச்சின் டெண்டுல்கர் விளாசிய சிக்சரையும் ஒப்பிட்டு, ட்விட்டரில் யாருடைய சிக்சர் சிறந்தது என்ற கேள்வி உலா வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறையில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 140 ஓட்டங்கள் விளாசினார். ஆட்டத்தின் 27வது ஓவரில் ஹசன் அலி வீசியை பந்தை, ரோஹித் ஷர்மா ஆப்சைடு திசையில் அபாரமாக சிக்சராக விளாசினார்.

இதேபோல் கடந்த 2003ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோயிப் அக்தர் வீசிய பந்தை, இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆப்சைடில் சிக்சராக விளாசினார். இந்த இரண்டு சிக்சர்களையும் ஒப்பிட்டு, யாருடைய சிக்சர் சிறந்தது என்ற கேள்வி ட்விட்டரில் உலா வருகிறது.

இதில் பெரும்பாலான ரசிகர்கள் சச்சினுக்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர். மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசும் சோயிப் அக்தரில் ஓவரில் சிக்சர் அடிப்பது சாதாரண காரியம் அல்ல.

எனவே சச்சின் டெண்டுல்கர் அடித்தது தான் சிறந்த சிக்சர் என்று பலர் கூறிவருகின்றனர். இருவரும் சிக்சர் விளாசுவது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers