போட்டிக்கு முந்தைய நாள் சானியாமிர்சாவுடன் பார்ட்டியில் கும்மாளம் போட்ட மாலிக்? ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான ஆட்டத்திற்கு முன்பு, மாலிக் தன் மனைவி சானியாமிர்சாவுடன் சேர்ந்து பார்டிக்கு சென்றிருந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங் மற்றும் துடுப்பாட்டத்தின் காரணமாக தோல்வியை சந்தித்தது.

இதனால் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான மாலிக் தன் மனைவி சானியாமிர்சாவுடன் சேர்ந்து போட்டி நடப்பதற்கு முந்தைய நாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகிய நிலையிலும், பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வியின் காரணமாகவும், இப்படி மனைவியுடன் சேர்ந்து லூட்டி அடித்தால் எப்படி போட்டியில் கவனம் செலுத்த முடியும் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு சில இன்றைய போட்டியில் தோற்க இதுவும் ஒரு காரணம் என்று பார்ட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாலிக் இந்தியா அணியுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆனால் நேற்று தான் சந்தித்த முதல் பந்திலே போல்டாகி திரும்பியது, பாகிஸ்தான் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers