அவுட்டே இல்ல..! கோஹ்லி ஏன் வெளியேறினார்: இது தான் காரணம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டே இல்லாத போது கோஹ்லி ஏன் மைதானத்தை விட்டு வெளியேறினார் என்ற சந்தேகத்திற்கு, இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று தனது சாதனையை தக்க வைத்துக்கொண்டது. போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அமீர் வீசிய பந்தை பின் பக்கம் விளாச முயன்றார் கோஹ்லி, ஆனால், பந்தை விக்கெட் கீப்பர் சர்பாரஸ் பிடித்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் நடுவரிடம் அவுட் என முறையிட, கோஹ்லி தானாகவே மைதானத்தை விட்டு வெளியேனார். பின்னர், வீடியோவை பார்த்த போது பந்து துடுப்பில் படவே இல்லை என தெரியவந்தது.

இதுகுறித்து கங்குலி விளக்கம் அளித்துள்ளார், அவர் கூறியதாவது, கோஹ்லியின் துடுப்பின் கை பிடி பகுதியில் பிரச்சினை இருந்தது, அதனால், துடுப்பிலிருந்து சத்தம் வந்திருக்கும். அந்த சத்தத்தினால் குழப்பமடைந்த கோஹ்லி, பந்து துடுப்பில் பட்டு தான் சென்றது என கருதி மைதானத்தை விட்டு வெளியேறி இருப்பார் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்