ரிஷப் பண்ட் களமிறங்குவது உறுதி! ஒப்புதல் அளித்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக ரிஷாப் பண்டை அணியில் சேர்ப்பதற்கு ஐ.சி.சி ஒப்புதல் அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதலுதவி எடுத்துக்கொண்ட அவருக்கு மருத்து பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், அவர் 3 போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுக்க என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், உலகக்கோப்பையில் இருந்து அவர் விலகுவதாக பி.சி.சி.ஐ நேற்று அறிவித்தது.

அத்துடன் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஐ.சி.சியின் போட்டி நடத்தும் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், அணி நிர்வாகம் அதற்காக காத்திருந்தது.

இந்நிலையில், ரிஷப் பண்ட் அணியில் விளையாட ஐ.சி.சி நேற்று இரவு ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்ட அறிவிப்பில், ‘உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர் காயம் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்ப்பது குறித்து போட்டி நடத்தும் தொழில்நுட்பக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

தொழில்நுட்பக் குழுவில் ஜெப் அலார்டைஸ், கேம்பெல் ஜேமிஸன், ஸ்டீவ் எல்வொர்த்தி, ஆலன் போர்தாம், ஹர்ஸா போக்ளே, குமார் சங்கக்காரா ஆகியோரின் ஒப்புதலின்படி ஷிகர் தவானுக்குப் பதிலாக, இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்