கர்ப்பமாக இருப்பதாக கிண்டலடிக்கப்பட்ட மலிங்கா... உண்மை என்ன? வெளியான வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை வீரர் மலிங்கா உடல் எடை கூடி பெரிய வயிறுடன் இருப்பது போல சமூகவலைதளங்களில் வெளியான புகைப்படம் போலி என தெரியவந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இரு தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பு மலிங்காவின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அதில் மலிங்காவின் உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும், அவர் வயிற்றைப் பார்த்தால் கர்ப்பமாக இருப்பது போல் தெரிவதாகவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில் அந்த புகைப்படம் போட்டோ ஷாப் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என தெரியவந்துள்ளது.

மலிங்காவின் உண்மையான தோற்றத்தை காட்டும் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்