கடும் விமர்சனத்திற்குள்ளான டோனியின் ஆட்டம்.. ஓய்வை அறிவிக்க கூறும் ரசிகர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டோனி ஆடிய விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம் சவுதம்டானில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கோஹ்லி 67 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியடைந்தது. முகமது நபி அதிகபட்சமாக 52 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் டோனியின் ஆட்டம் மந்தமாக இருந்தது. அவர் 52 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். டோனியின் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, டோனிக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், டோனி இப்போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் சிலர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்