டோனியின் பேட்டிங்.. சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி

Report Print Basu in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் மெதுவான துடுப்பாட்டத்தால் தான் ஏமாற்றம் அடைந்ததாக ஜம்பாவன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்திய அணியின் மெதுவான துடுப்பாட்டத்தால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். கேதருக்கும் டோனிக்கும் இடையிலான கூட்டணி குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை, அது மிகவும் மெதுவாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் 34 சுழற்பந்துவீச்சு ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி 119 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அது இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. எந்தவொரு நேர்மறையான நோக்கமும் இல்லை என சச்சின் கூறியுள்ளார்.

கோஹ்லி வெளியேறியதை அடுத்து 38 வது ஓவர் முதல் 45 வது ஓவரை வரை நாங்கள் அதிக ஓட்டங்கள எடுக்கவில்லை. ஒரு ஓவருக்கு 2 முதல் 3 பந்துகளுக்கு ஓட்டங்களே எடுக்கவில்லை. உலகக் கோப்பை தொடரில் ஜாதவ் அரிதாகவே துடுப்பாடியதால், மூத்த வீரர் டோனி தான் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்று சச்சின் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்