நியூசிலாந்து வீரரை மிரட்டலாக ரன் அவுட் செய்த வீரர்... மைதானத்தில் கம்பீரமாக சல்யூட் அடித்த வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோட்ரெல், நியூசிலாந்து அணி வீரர் கிரண்ட்ஹோம் மிரட்டலாக ரன்-அவுட் செய்தார்.

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக வெஸ்ட் இண்டீஸை அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல் அபாரமாக செயல்பட்டார். பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனையும் அவுட் ஆக்கினார்.

பின்னர் டாம் லாதமையும் அவுட் செய்து மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் 3 கேட்சுகளையும் பிடித்து அசத்தினார்.

இது தவிர நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோமை மின்னல் வேகத்தில் துல்லியமாக ரன்-அவுட் செய்தார். ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தும் போதும் சல்யூட் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் கோட்ரெல், நேற்றைய தினம் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்