நடுவரிடம் ஆக்ரோஷம்.. கோஹ்லிக்கு நேர்ந்த கதி

Report Print Basu in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் நடுவரிடம் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டதற்காக இந்திய அணித்தலைவர் கோஹ்லி மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஆப்கானிஸ்தான் இன்னிங்சில் 29வது ஓவரில் நடந்தது. பும்ரா வீசிய பந்து ஆப்கான் துடுப்பாட்டகாரர் ரஹ்மத் ஷாவின் திண்டு மீது தாக்கியது. அப்போது, நடுவரிடம் எல்பிடபிள்யூ அவுட்காக முறையீட்டது நிராகரிக்கப்பட்டது. இதனால், கோஹ்லி அதிருப்தி அடைந்தார்.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், 29வது ஓவரில் எல்பிடபிள்யூ அவுட்க்காக, நடுவர் அலீம் தார் முறையிட்ட கோஹ்லி, அவரிடம் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டார்.

இதன் மூலம் ஐசிசி விதிகளை மீறி கோஹ்லி செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், கோஹ்லிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட கோஹ்லி அபாரதத்தை ஏற்றுக்கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்