அந்த வீடியோவைப் பார்த்து என்னுடைய மனைவி கதறி அழுதார்... பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் வேதனையுடன் பேசிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஹோட்டலில் ரசிகர் ஒருவர் தன்னை கிண்டல் செய்த வீடியோவைப் பார்த்து மனைவி கதறி அழுததாக, பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

முதலில் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி, தற்போது அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

நேற்றைய பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 237 ஓட்டங்களுக்குள் சுருட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்ற போது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், சர்பிராஸ் அகமது மிகவும் மோசமாக கிண்டல் செய்தார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதன் பின் அந்த ரசிகர் அதற்கு மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் சர்பிராஸ், இதைப்பற்றி தாம் எதுவும் சொல்லமுடியாது என்றும், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்தமுடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ எடுக்கப்பட்டபோது தனது மகனும் கூட இருந்தது தனக்கு மேலும் வலியை உண்டாக்கியதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவை எடுத்த நபரும் தனது குடும்பத்துடன் இருந்ததால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடமாட்டார் என தாம் நினைத்ததாகவும் வீடியோ வெளியான பின்னர் தாம் ஹோட்டல் அறைக்கு வந்தபோது தமது மனைவி அழுதுகொண்டிருந்ததாகவும், தாம் அவரை சமாதானப்படுத்தியதாகவும் சர்ப்பராஸ் கூறியுள்ளார்.

அந்த வீடியோ எடுக்கப்பட்டபோதே தாம் கோபமாக எதிர்வினையாற்றியிருந்தால் உண்மையில் நடந்தது என்ன என்பது மக்களுக்கு தெரிந்திருக்காது, வீடியோ வெளியானபிறகு அனைவரும் தனக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் அவர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்