வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி.. டோனியின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோஹித் ஷர்மா?

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், டோனியின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இங்கிலாந்தில் 12வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி விரைவிலேயே ஆட்டமிழந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்று நடக்கும் லீக் போட்டி இந்திய அணி எதிர்கொள்கிறது.

மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா சாதனை ஒன்றை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

அதாவது, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற டோனியின் சாதனையை, ரோஹித் ஷர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது. டோனி 345 போட்டிகளில் 225 சிக்சர்கள் விளாசியுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா 210 போட்டிகளில் 224 சிக்சர்கள் அடித்துள்ளார்.

அத்துடன் இன்றைய போட்டியில் ரோஹித் மேலும் இரண்டு சிக்சர்கள் அடித்தால், சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடிப்பார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி(351), வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல்(324), இலங்கையின் ஜெயசூர்யா(270) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக (ஒருநாள், டி20, டெஸ்ட்) சர்வதேச போட்டிகளில் டோனி 355 சிக்சர்களையும், ரோஹித் ஷர்மா 358 சிக்சர்களையும் விளாசியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்