விராட்கோஹ்லி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அதிவேகத்தில் மூவாயிரம் ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம், இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம், 121 பந்துகளில் 101 ரன்களை எடுத்திருந்தார். இதன்மூலம் உலகக்கிண்ணம் அரங்கில், சுமார் 32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை 24 வயதான பாபர் ஆசம் பெற்றார்.

அதோடு மட்டுமில்லாமல் நேற்று 29 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்னை கடந்து அசத்தினார்.

இதன்மூலம் 75 இன்னிங்சில் மூவாயிரம் ரன்களை கடந்து இரண்டாவது இடத்தில் இருந்த விராட்கோஹ்லியின் சாதனையை முறியடித்தார்.

இந்த நிலையில் ஹசிம் அம்லா 57 இன்னிங்சில் 3 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்திலும், அவரை தொடர்ந்து பாபர் ஆசம் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

முன்னதாக 1000 மற்றும் 2 ஆயிரம் ரன்னில் கோஹ்லியின் சாதனையை அவர் முறியடித்திருந்தது குறிப்பித்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்