வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

மான்செஸ்டர் நகரில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரில் தொடங்கியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதன்படி இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியுள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெறவில்லை. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் அம்பரீஸ் மற்றும் அல்லன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 126 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 59 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 62 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்