ரோகித் சர்மாவுக்கு அவுட்டே இல்லாமல் அவுட் கொடுத்த நடுவர்? வைரலாகும் சர்ச்சை வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் ரோகித்சர்மாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன் படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் ராகுல் களமிறங்கினர்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது, ரோகித் சர்மா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

முதலில் நடுவரிடம் ரோகித்திற்கு அவுட் கேட்ட போது, கொடுக்கப்படவில்லை, அதன் பின் மூன்றாவது நடுவரிடம் சென்ற போது, அது அவுட் என்று கொடுக்கப்பட்டது.

ஆனால் டிவி ரீப்ளேயில் பந்தானது பேட்டில் பட்டதால், பேடில் பட்டதா தெளிவாக தெரியவில்லை, இதனால் அவுட் இல்லாததை நடுவர் அவுட் கொடுத்துவிட்டதாக இந்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்