அனைத்து போட்டிகளும் எங்களுக்கு வாழ்வா-சாவா போன்றதுதான்! சாதனை படைத்த பாபர் அசாம்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை, 1992ஆம் ஆண்டு தொடருடன் ஒப்பிடுவது குறித்து சிந்திக்கவில்லை என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்தத் தொடரில் தொடக்கத்தில் சரிவை சந்தித்து வந்த பாகிஸ்தான், தற்போது வெற்றிக்கணக்கை துவங்கியுள்ளது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் சதம் விளாசி சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து, 1992ஆம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு லீக் ஆட்டத்தில் கிடைத்த ரிசல்ட், தற்போதைய தொடரிலும் கிடைத்துள்ளது.

அதாவது, தோல்வியடையாமல் வந்த நியூசிலாந்தை நேற்றைய தினம் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. எனவே, 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் வென்றது போலவே, இம்முறையும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இதுகுறித்து கூறுகையில், ‘1992ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றித் தோல்வி முடிவுகளுடன், தற்போதைய உலகக்கோப்பை தொடரின் முடிவுகளை ஒப்பிட்டு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால், நாங்கள் 1992 உலகக்கோப்பையுடன் ஒப்பிடுவதை பற்றி சிந்திக்கவில்லை. இந்த தொடரில் எங்களுக்கு இருக்கும் போட்டிகள் அனைத்தும் வாழ்வா? சாவா? போன்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.

நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் கிடைத்த சதம் என்னுடைய சிறந்த சதங்களில் ஒன்று. ஏனென்றால் கட்டாயம் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் கிடைத்தது. போட்டிக்கு முன் பெர்குசனை சிறந்த வகையில் ஆட வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், சாண்ட்னெரை எதிர்த்து கவனமாக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாங்கள் இங்கிலாந்தில் விளையாடும்போதெல்லாம், ரசிகர்கள் அதிக அளவில் வருகை வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து நீடிப்பதால் நான் பெருமையடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்