உலகக்கோப்பையில் சச்சின்-லாராவின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, அதிவேகமாக 20 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சச்சின் மற்றும் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

மான்செஸ்டரில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 37 ஓட்டங்களை எட்டியபோது, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 20 ஆயிரம் ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் பிரையன் லாரா ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

சச்சின்-லாரா இருவரும் 453 இன்னிங்ஸ்களில் 20 ஆயிரம் ஓட்டங்களை கடந்த நிலையில், கோஹ்லி 416 இன்னிங்ஸ்களிலே அந்த சாதனையை முறியடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் (468 இன்னிங்ஸ்) உள்ளார்.

மேலும், ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 12வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றுள்ளார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்திய வீரர்களில் 20 ஆயிரம் ஓட்டங்கள் கடந்தவர்கள் ஆவர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்