முடிவுக்கு வரும் 27 ஆண்டுகால கிரிக்கெட்.. 43 வயதில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மார்கஸ் டிரஸ்கோதிக், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரஸ்கோதிக், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து கடந்த 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

எனினும், முதல்தர போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடி வந்தார். 391 போட்டிகளில் 26,234 ஓட்டங்கள் அந்த அணிக்காக குவித்துள்ளார். இதில் 66 சதங்கள் மற்றும் 127 அரை சதங்கள் அடங்கும்.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றைய தினம் டிரஸ்கோதிக்(43) அறிவித்தார்.

GETTY

அப்போது அவர் கூறுகையில், ‘கடந்த 27 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து விளையாடினேன். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. இப்போது ஓய்வு பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

டிரஸ்கோதிக், 76 டெஸ்ட் போட்டிகளில் 5,825 ஓட்டங்களும், 123 ஒருநாள் போட்டிகளில் 4,335 ஓட்டங்களும் குவித்துள்ளார். இவற்றில் டெஸ்டில் 14 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்