இந்தியா எங்களை அரையிறுதிக்கு வர விடாது... பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொல்லும் ஆச்சரிய காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வேண்டும் என்றே தோல்வியடைந்து பாகிஸ்தான் அணியை அரையிறுதிப் போட்டிக்குள் நுழையவிடாது என்று அந்தணியின் முன்னாள் வீரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு பலம் வாய்ந்த அணியாக வந்தது. ஆனால் தன்னுடைய முதல் போட்டியிலே மேற்கிந்திய தீவிடம் தோல்வி, அடுத்து இங்கிலாந்து, மூன்றாவது மழையால் ரத்து, நான்காவது போட்டி இந்தியாவிடம் தோல்வி, 5-வது அவுஸ்திரேலியாவிடம் தோல்வி, அடுத்து தென் ஆப்பிரிக்காவுடன், நியூசிலாந்து அணியுடன் அடுத்தடுத்து வெற்றி என்று 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என அரையிறுதிக்கான வாய்ப்பை கெட்டியாக பிடித்து வைத்துள்ளது.

அடுத்து நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் ஜெயித்தால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும், இருப்பினும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியும் இதில் இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி இந்திய அணி வேண்டும் என்றே வரும் லீக் போட்டிகளில் தோற்கும் என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நாங்கள் அரையிறுதிக்குள் வருவதை இந்திய அணியினர் விரும்பமாடார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போதே அது தெரிந்திருக்கும்.

இந்திய அணிக்கு வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணியுடன் போட்டி இருக்கிறது. இதில் இலங்கை, வங்கதேசம் அணியுடன் வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்குள் வரவிடாமல் செய்வார்கள்.

இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா அணி எவ்வாறு விளையாடியது, டேவிட் வார்னர் என்ன செய்தார். தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் பேஷனாகிவிட்டது.

கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன், அந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணி வேண்டுமென்றே பாகிஸ்தானிடம் லீக் ஆட்டத்தில் தோற்று அரையிறுதியை தங்கள் நாட்டில் விளையாட வேண்டும் என்று விரும்பியது.

ஆனால், அரையிறுதியில் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம். அதுபோல எங்களை அரையிறுதிக்குள் வரவிடாமல் இந்தியா வேண்டும் என்றே தடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்