இவ்வாறு நடந்தால் மட்டுமே.. இலங்கை அணியை காப்பாற்ற முடியும்

Report Print Basu in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா எதிரான தோல்வியை அடுத்து இலங்கை அணியின் உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு மிகவும் நெருக்கடியான நிலையைில் உள்ளது.

எனினும், இங்கிலாந்தில் மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், எதிர்வரும் 10 லீக் போட்டிகளின் முடிவு இவ்வாறாக அமைந்தால் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

யூன் 29ம் திகதி இன்று நடைபெறும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற வேண்டும். நியூசிலாந்து-அவுஸ்திரேலியா போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற வேண்டும்.

30ம் திகதி இங்கிலாந்து எதிரான போட்டியில் இந்தியாவும், யூலை 1ம் திகதி மேற்கிந்தி தீவுகள் எதிரான போட்டியில் இலங்கை அணியும் வெற்றிப்பெற வேண்டும். யூலை 2ம் திகதி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவும், யூலை 3ம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிப் பெற வேண்டும்.

யூலை 5ம் திகதி பாகிஸ்தான் அணியை வங்க தேசம் வீழ்த்த வேண்டும். யூலை 6ம் திகதி இந்திய அணியை இலங்கை அணி வீழ்த்த வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற வேண்டும்.

இவ்வாறு நடந்தால் லீக் போட்டிகளின் முடிவில் இலங்கை அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். முதலிடத்தை அவுஸ்திரேலியாவும், இர்ணடாவது இடத்தை இந்தியாவும், மூன்றவாது இடத்தை நியூசிலாந்து அணியும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்