டோனி, கோஹ்லி ஜோடி தான் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணம்: கங்குலி ஆவேசம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த முதல் தோல்விக்கு கோஹ்லி, ரோகித் மற்றும் டோனி, ஜாதவ் ஜோடிகள் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா போட்டிக்கு பின் பேட்டியளித்த கங்குலி கூறியதாவது, இந்திய அணி வெற்றி இலக்கை விரட்டும் போது முதல் 10 ஓவர், கடைசி 5 ஓவர் என இரண்டு கட்டங்களில் போட்டியை இழந்துவிட்டது.

முதல் பத்து ஓவர்களில் கோஹ்லி-ரோகித் ஜோடி ஓட்டங்களை குவிக்க திணறியது. 338 ஓட்டங்களை இலக்காக துடுப்பாடும் போது முதல் பவர்பிளே-வில் 28 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருக்க கூடாது. கோஹ்லி-ரோகித் இருவருமே ஆரம்பத்திலே ரிஸ்க் எடுத்து விளையாடி இருக்க வேண்டும்.

அதே போல், 5 விக்கெட்டுகள் இருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 71 ஓட்டங்கள் தேவை என்ற பட்சத்தில், டோனி-ஜாதவ் ஜோடி, பவுண்டரி விளாசாமல், பந்துக்கு பந்து ஓட்டங்கள் எடுத்தனர். கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 2 பவுண்டரிகளை மட்டும் இந்திய அடித்தது.

இங்கிலாந்து 13 சிக்ஸர்களையும் இந்தியா 1 மட்டும் அடித்தது. ஒரு பக்கம் பவுண்டரி மிகக் குறுகியதாக இருந்தது, எனவே இந்திய வீரர்களிடமிருந்து அதிக பலம் கொண்ட கிரிக்கெட் இருந்திருக்க வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்