குளிர்பானத்தை கொடுக்க இவர் தான் கிடைத்தாரா? தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் முரளி கார்த்திக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது முதன்முறையாக அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு தரப்பட்டது.

இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு தரப்படவில்லை.

அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுடன் விளையாடும் போதும் விஜய் சங்கர் பந்து வீசவில்லை.

பின்னர் விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பங்குபெறவில்லை.

இது குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் டுவிட்டர் பக்கத்தில், காலில் அடிப்பட்ட காரணத்தால் விஜய் சங்கரால் போட்டியில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றால் பின்னர் ஏன் குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்?

அந்த வேலையை செய்ய அவரை தவிர யாரும் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதை தான் முரளி கார்த்திக் மறைமுகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...