இந்தியாவை நாங்க அடிச்சுட்டோம்... உலகக்கோப்பையை கேட்கும் பீட்டர்சன்!

Report Print Santhan in கிரிக்கெட்

உலககோப்பை தொடரில் இந்திய அணியை யார் வெல்கிறார்களோ அவர்களே இந்த முறை உலகக்கோப்பையை வெல்வார்கள் என்று பலரும் கூறியதால், தற்போது நாங்கள் இந்தியாவை ஜெயித்துவிட்டோம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா இருந்து வருவதால், இந்திய அணியை எந்த அணி ஜெயிக்கிறதோ அந்தணி தான் உலகக்கோப்பை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் உட்பட முன்னணி வீரர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஜெயித்துவிட்டதால், அந்தணியின் முன்னாள் வீரரான கெவீன் பீட்டர்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பலரும் இந்திய அணியை யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு தான் உலகக்கோப்பை என்று சொன்னீர்கள், நாங்கள் ஜெயித்துவிட்டோம், அப்போது எங்களுக்கு தான் கோப்பை என்று கோப்பையின் இமோஜியை பதிவு செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...