இந்திய அணிக்கு விழுந்த மற்றொரு மிகப் பெரிய அடி... அரையிறுதி நேரத்தில் தமிழக வீரர் விலகல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய்சங்கர் காயம் காரணமாக விலகியுள்ளதால், இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், தமிழக வீரர் விஜய்சங்கர் இந்திய அணியில் விளையாடி வந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் காயமடைந்ததாக கூறப்பட்டது.

எனினும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் நேற்று நடந்த போட்டியில் அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.

இந்நிலையில், விஜய்சங்கர் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த துவக்க வீரர் ஷிகர் தவான் காயத்தால் விலகியதால், இந்திய அணியின் துடுப்பாட்ட தொடக்கம் திணறி வருகிறது.

தற்போது அரையிறுதி நெருங்கும் வேளையில், ஆல்-ரவுண்டர் வீரரான விஜய்சங்கர் விலகியிருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய அடியாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...