இங்கிலாந்து நியூசிலாந்து பலப்பரீட்சை... யார் அரையிறுதியை எட்டுவது?

Report Print Abisha in கிரிக்கெட்

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

செஸ்டர்-லீ-ஸ்ரிட்டில் இன்று நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மேதுகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இது தான் கடைசி லீக் ஆட்டமாகும்.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்து புள்ளிபட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.

நியூசிலாந்து கடைசி இரு ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 244 ஓட்டங்கள் இலக்கை கூட விரட்டிப்பிடிக்க முடியாமல் 157 ஓட்டங்களில் சுருண்டது. தற்போதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 11 புள்ளிகள் பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றால் அரை இறுதிக்கு எந்த தடையும் இன்றி முன்னேறும். ஆனால் தோற்றால் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

அதேபோல் நியூசிலாந்து இன்றை போட்டி வெற்றிப்பெற்றால் அரையிறுதியில் கால்பதிக்கும். தோற்றால் மற்ற அணியினரின் வெற்றியை பொறுத்து நியூசிலாந்திற்கான வாய்ப்பு நிர்ணைக்கப்படும்

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த போட்டி இரு அணியின் அரையிறுதியை தீர்மானிக்க உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...