சங்ககாரா சாதனை சமன்! டோனி சாதனை முறியடிப்பு.. ஒரே போட்டியில் வியக்கவைத்த ரோகித் சர்மா

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வென்றது.

இப்போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 104 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் விளாசிய முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககராவின் சாதனையை (4 சதம்) ரோகித் சர்மா சமன் செய்தார்.

இது தவிர, உலகக்கோப்பை அரங்கில் ரோகித் சர்மா அடித்த 5வது சதம் இதுவாகும். இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பாண்டிங், சங்ககரா சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.

இப்போட்டியில் 104 ரன்கள் அடித்த ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார்.

இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 5 சிக்சர்கள் விளாசினார்.

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், முன்னாள் இந்திய கேப்டன் டோனியை பின்னுக்கு தள்ளி, ரோகித் சர்மா நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...