சதமடித்து சாதனை படைத்த சஞ்சீவனுக்கு வாழ்த்துக்கள்

Report Print Sumi in கிரிக்கெட்

யாழ்பாணம் - விக்ரோறியா கல்லூரியின் கிரிக்கெட் அணி வீரன் கோணேஸ்வரன் சஞ்சீவன் பல தசாப்த காலத்தின் பின்னர் சதமடித்து சாதனை நிலைநாட்டியுள்ளார்.

மகாஜன கல்லூரியுடனான UNDER-17 கிரிக்கெட் போட்டியில் அமோகமாக 112 ஓட்டங்களை குவித்து அபாரமாக சதமடித்துள்ளார் சஞ்சீவன். 9 பௌண்டறிகள், 4 சிக்ஸர்களை அடித்து சஞ்ஜீவன் இந்த சதத்தை பெற்றுள்ளார்.

UNDER-17 பிரிவில் போட்டித் தொடரொன்றில் விக்ரோறியாக் கல்லூரி வீரரொருவர் பல தசாப்தங்களின் பின்னர் சதமடித்துள்ளமை கல்லூரிச் சமூகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...