இலங்கையுடன் கோஹ்லி இந்த தவறு செய்தால் அரையிறுதியில் ஆட முடியாது: எச்சரிக்கும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அது இந்திய அணிக்கு பெரும் இழப்பை தேடி தரும்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இருப்பினும் போட்டிகளுக்கிடையே கோஹ்லி அவ்வப்போது தன்னுடைய ஆக்ரோஷமான முகத்தை காட்டி வருகிறார்.

ஒவ்வொரு பந்துக்கும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார். நடுவர்கள் சில நேரங்களில் இந்தியாவுக்கு எதிராக தவறான முடிவுகளை கொடுத்துவிட்டால், அவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு அபராதத்துடன் தகுதியிழப்பு புள்ளி ஒன்று வழங்கப்பட்டது.

பொதுவாக ஐசிசி விதிப்படி ஒரு வீரர் 24 மாதத்திற்குள் அதாவது 2 வருடங்களுக்குள் நான்கு தகுதியிழப்பு புள்ளிகளை பெற்று விட்டால், அந்த வீரர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 இதில் எது முதலில் வருகிறதோ, அதில் விளையாட தடைவிதிக்கப்படும்.

கோஹ்லி கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஒரு தகுதியிழப்பு புள்ளி பெற்றிருந்தார். தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஒரு தகுதியிழப்பு புள்ளி என இரண்டு தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றிருக்கிறார்.

இது போன்ற நிலையில் தான் நேற்றைய வங்கதேச அணிக்கெதிரான ஆட்டத்தில், சவுமியா சர்காருக்கு எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது.

ஆனால் நடுவர் அவுட் கொடுக்காத காரணத்தினால், கோஹ்லி ரிவ்யூ எடுத்தார், அப்போதுபந்து பேட்டிலும், பேட்டிலும் ஒரே நேரத்தில் பட்டது போன்று இருந்ததால், குழப்பம் அடைந்த 3-வது நடுவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமான வகையில் கொடுத்தார்.

இதனால் கோபமடைந்த கோஹ்லி மைதானத்தில் இருந்த நடுவரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.

இதே போன்று கோஹ்லி வரும் இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை இரண்டு புள்ளிகள் பெற்றால் கோஹ்லியால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்படியிருந்தால், இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், கோஹ்லி நடுவர்கள் விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...