மீன் போல் உடலை வளைத்து கேட்ச் பிடித்த வீரர்! மிரண்டுபோன இங்கிலாந்து கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் சாண்ட்னர், மீனைப் போல் உடலை வளைத்து கேட்ச் பிடித்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடந்தது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தபோது கேப்டன் மோர்கன் நிலைத்து நின்று விளையாடினார்.

அணியின் ஸ்கோர் 272 ஆக இருந்தபோது, ஹென்றியின் பந்தை மோர்கன் அடிக்க பீல்டிங்கில் இருந்த நியூசிலாந்து வீரர் சாண்டனர் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

அவர் மீனைப் போல் உடலை வளைத்து அந்த கேட்ச் பிடித்ததைப் பார்த்து, மோர்கன் மிரண்டுபோய் வெளியேறினார். இயான் மோர்கன் இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தார்.

வீடியோவை காண

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...