எங்களது இந்த நிலைமைக்கு காரணம் இதுதான்.. அற்புதம் நிகழும்! பாகிஸ்தான் கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தான் அணி போராட வேண்டிய நிலை உருவானதற்கான காரணம் குறித்து கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை எட்ட முடியும்.

இல்லையென்றால் நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இந்நிலையில், இன்றைய போட்டியில் அற்புதம் நிகழும் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கடைசி போட்டியை அதிகபட்ச லெவலில் வெற்றி பெறுவதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். ஆனாலும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

அல்லாஹ் உதவி செய்தால் அற்புதம் நிகழலாம். நீங்கள் ஒரு பிட்ச்சில் 600, 500 அல்லது 400 மேல் ஸ்கோர் எடுக்கும்போது, மற்ற அணியை 50 ஓட்டங்களுக்குள் வெளியேற்ற முடியும் என்று நினைத்தால் அது கடினமான காரியம் தான்.

AFP

இருந்தாலும் அதற்கான முழு முயற்சியை நாங்கள் கொடுப்போம். இந்த ஒட்டுமொத்த தொடரில் 280-300 ஓட்டங்கள் வரை தான் குவிக்கப்படுகிறது. இங்குள்ள மைதானங்கள் அப்படி தான் இருக்கின்றன. மைதானங்கள் அதிக ஓட்டங்கள் குவிக்கும்படி இல்லை.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளவே இந்த மைதானங்கள் ஏற்றபடியாக இல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். அவுஸ்திரேலியா உடன் தோற்றதே எங்களது இந்த நிலைமைக்கு திருப்புமுனையாக அமைந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்