இலங்கையை இன்று இந்தியா வீழ்த்தினால் காத்திருக்கு மிகப் பெரிய கண்டம்... அரையிறுதியில் சமாளிக்குமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இந்தியா ஜெயித்து, அவுஸ்திரேலியா அணி தன்னுடைய அடுத்த போட்டியில் தோற்றால், இந்திய அணிக்கு அரையிறுதிப் போட்டியில் மிகப் பெரிய கண்டம் காத்திருக்கிறது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணி தற்போது 8 போட்டிகளில் 6 வெற்றி 1 தோல்வி என 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதே சமயம் இன்றுடன் இலங்கையுடன் மோதும் இந்திய அணி வெற்றி பெற்றால் 15 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு வந்துவிடும். ஆனால் அவுஸ்திரேலியா அணி இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது, அதில் அவுஸ்திலியா தோல்வியடைந்தால் மட்டுமே இந்திய அணி முதலிடத்திற்கு வரும்.

அப்படி முதலிடத்திற்கு வந்தால், இந்தியாவும், நியூசிலாந்து அணியும் மோத வேண்டி இருக்கும், ஐசிசி நடத்தும் பெரிய டிராபி தொடர்களில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகளில் நியூசிலாந்து அணியே அதிகமாக வெற்றி பெற்றுள்ளது.

என்ன தான் பலமான இந்திய அணியாக இருந்தாலும், நியூசிலாந்திடம் அடிவாங்குவதால், ரசிகர்கள் நியூசிலாந்தை இந்திய அணி அரையிறுதியில் சமாளிக்குமா என்ற வேதனையில் இருக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்